ஆயிரம் பெண்மை மலரட்டுமே . . .

A 115-part Story Series.

Series Info
அன்பு, பண்பு, கனிவு கருணை போன்ற சிறப்பம்சங்கள் பொருந்திய பெண்தான் தேவதையோ!
0
2.3k
3
10
1


Started: 05/13/2023

Updated: 10/09/2023

The author is still actively writing this series.

Share this Series
Series Introduction

நல்ல குண நலன்கள் பொருந்திய மனிதர்களைக் காண்பது அரிது! கனவு அல்லது கற்பனை உலகிலாவது அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை உருவாக்கி மனம் மகிழ்வோம். 70 ~ 80-களில் தென்னிந்தியாவின் கிராமச் சூழலில் நடந்த விதமாகக் கதையைச் சித்தரித்திருப்பது வாசகர்கள் மனதை ஈர்க்கும் என நம்புகிறேன்.

கதையைப்பற்றி சில குறிப்புகள்

1. கதையின் காலகட்டம்: 80-களின் தொடக்க காலம்; ஒரு மிகச் சிறிய கிராமத்தில் நடந்ததாக சித்தரித்திருக்கிறேன்

2. கதாநாயகன்: 20 வயது இளைய உடலில் 50 வயது அனுபவ மூளை பொருத்தியதாக கற்பனை

3. இதில் வரும் ஒரு கதாநாயகி இந்திய-அமெரிக்க கலப்பினம்; அந்த கதாபாத்திரம் தமிழை பேசிப்பழகி தேர்ச்சி பெருவதை சற்று நடைமுறையாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். அவள் செய்யும் பல தவறான தமிழ் உச்சரிப்புகளை சித்தரித்திருக்கும் என் முயற்சி உங்களை குழப்பாமல் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்குமென நம்புகிறேன்

4. இந்த கதையில் காமம் மட்டுமின்றி ஓரளவு மற்ற வழக்கமான வாழ்க்கைப் பிரச்சினையையும் கலந்து சித்தரித்துள்ளேன். படித்து உங்கள் மேலான கருத்து பரிமாற்றத்தை பகிர்ந்து கொள்வீர்களென எதிர்நோக்குகிறேன்.

காமக்கதைகளைப்பற்றிய என் புரிந்துணர்வு

1. காமம் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட செயல் அதாவது யார் யாருடன் காம சுகத்தை அனுபவிக்க அனுமதிப்பதென்பது இந்த சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதே.

2. இந்த கட்டுப்பாட்டு விதிமுறைக்குள் திருப்தி அடையாத பலர் அதை ஓரளவு மீறுவதும் அல்லது மீறுவதாக கற்பனை செய்து அனுபவிப்பதும் இயல்பே.

3. இந்த வரம்பு/எல்லை மீற நமக்கு அமைந்த அல்லது நாம் திட்டமிட்டு அமைத்த சூழ்நிலை/காட்சிகளே மிக சுவாரசியமானது; அதனால் அந்த சந்தரப்பம்/சூழ்நிலைகளை விளக்குவதில் அதிக கவனம் நேரம் செலவிடுகிறேன். அதாவது சிறிதளவு காமக்காட்சி/செயலுக்கு பெருமளவு அடித்தளமாக குணம், நலம், பண்பு, ஒழுக்கம், மனப்பாங்கு, திறமை, சந்தர்ப்பம், சூழ்நிலை என பல்வேறு அம்சங்களை விவரமாக சித்தரிக்க வேண்டியது அவசியம் என்பது என் கருத்து

4. வேறுவிதமாக கூறிப்பிட்டால், ஒரு காமக்கலவி இன்பத்தில் முன்விளையாட்டு (Foreplay பாலுணர்வூட்டல் / காமத்தூண்டல்) எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகிக்குமோ அதைப் போல காமக்கதைகளுக்கு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை விவரித்து விளக்குவது அவசியமென்பது என் கருத்து.

TABLE OF CONTENTS